என்று வரும் அந்த தேர்வு நாள்
ஆண்டு முழுவதும்
படித்துக் கொண்டுதான் இருந்தேன் ...
பரிட்சையன்றும் படித்தேன் ..
படித்துப் படித்து
புத்தகம் கூட தேய்ந்தது ..
பயம் மட்டும் வளர்ந்தது ...
பத்தி பதியாய் எழுத எண்ணி
தேர்வு அறைக்குச் சென்றேன்
தோழிகளுடன் ..
மணி அடித்தது ..
பயம் ஆரம்பித்தது ..
வினா தாளும் கைக்கு வந்தது..
கண்களும் இருண்டது ..
இறைவனை வணங்கி
பிள்ளையார் சுழியிட்டுத் துவங்கினேன்
நல்ல துவக்கமாய் ..
மறந்தது முதல் வரியே ..
தேடி பார்த்தேன்
தெரிந்ததை ..
எழுதத் துவங்கினேன் ...
எப்படியாவது இந்த முறை
இரண்டாவது மதிப்பெண் பெற வேண்டும் என்று ..
சாந்தியை விட ஒரு மதிப்பெண்
கூடுதலனால் போதுமே
அப்பாவிடமிருந்து தப்பிக்கலாம் அடியிலிருந்து ...
எப்படியாவது 70 மதிப்பெண்ணைத்
தாண்ட வேண்டும் ,
இல்லையேல் மலர் டீச்சர்
இரண்டடி கொடுப்பாரே !
அப்பா !
1 மணி நேரம் முடிந்தது ...
அடடே !
1 பத்தியை எழுத மறந்து விட்டேனே !!
அச்சோ !
கண்மணி நன்கு எழுதியிருப்பாளோ ?
இருக்காது .. இருக்காது ..
அவளுக்குத் தான் உடம்பு சரியில்லையே ..
கட கடவென முடித்தேன் ..
கடைசி நிமிடம் வரை எழுதினேன் ..
அந்த நாள் இன்றும்
என் நினைவில் மறவா நாள் ..
ஏனென்றால் நான் வாங்கியது 80 மதிப்பெண்!
ஒவ்வொரு தேர்வும்
பயத்தோடுதான் ..
பரிட்சையமானது பயமில்லா தேர்வு இன்று ...

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக