அனுமதிக்காதே ! அனுமதிக்காதே !
புத்தகச் சுமை தூக்கும் சிறு விரல்கள்
இன்று நீ பணம் பார்க்க இயலும்
அனால்,
நாளை உன் குழந்தையின் நலம் பார்க்க இயலாது ..
உன் சோம்பேறித்தனம் அழிக்கப்பட வேண்டியது
அதை மறந்து உன் குழந்தையை
சோர்வடைய வைக்காதே !
ஒருவன் படிக்க வைக்கிறான் அவன் மகனை
தந்தை என்ற பொறுப்பில் ..
வேலைக்கு அமர்த்துகிறான் சிறுவனை
முதலாளி என்ற பெயரில் ..
உணர்ந்து செயல்பாடு..
உறுதியெடு..
தொழிலாளியின் மகனும் படிக்கத் தகுதியுள்ளவன் அன்றோ ?



நாட்டு நல பணித்திட்டத்த முகாமின் குழந்தைத் தொழிலாளர் ஒழிப்புப் பிரச்சார ஊர்வலத்திற்குத் துண்டு வெளியீடாக எழுதிய முதல் விழிப்புணர்வுக் கவிதை..
பதிலளிநீக்கு