23 ஆகஸ்ட் 2013

நீங்காமல்!!!!

எப்போதும் என்னை அவள் புறம்
வைத்துக்கொண்டாள்..
என் தாயை காட்டிலும்
அவளிடம் அதிகமாக நான் பெற்றேன்
பரிவினை..

எப்படி சொல்ல ..
நான் பெற்ற தோழிகளைக் காட்டிலும்
அவள் ஒரு தனிவிதம்
புதுவிதம்..

பெற்றேன் அவள் நட்பை ..
கற்றேன் தூய்மையை..
என்னை திருத்தும் திறனாளி..
என் திறமையை போற்றும் அறிவாளி ..
பொக்கிசமானவள் எனக்கு..
என்னை படித்தவள்..
எனக்கு கை கொடுத்தவள்..
கற்பனைக்கு எட்டாத கோமாளி..

இடைவெளி கொஞ்சம் கூட இல்லை
அத்தருணம் ..
என்றும் எனக்கும்
அவள் நினைவுகளுக்கும் ..
நண்பர்கள் தின கொண்டாட்டத்தில்
எதிர்பார்த்தேன் அவள் அழைப்பை ..
கிடைக்கவில்லை அவள் வாழ்த்து..
இருப்பினும் மனதில் அவளை
நினைக்காத நாளில்லை..
நீங்காமல் இருக்கிறாள் நினைவில்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக