11 ஏப்ரல் 2013

உறவு

தாய் வழி  உறவென்றால்
அமிர்தம் போல
தித்திக்கும் நினைத்த பொழுதே ..
 தாய் மாமன்  காவலன் போல...
 பாட்டியின்  என்றும் குறையா அன்பு 
அவள் என் மூத்ததாய்   என்பதால்..

தோள்  மேல் கையிட்டு  
நடையிடுவேன் 
என் தோழியாய்  
சித்தி    
இருக்கும் காரணத்தால் ..
 
அத்தை வந்த பின்போ 
உரிமைகள் மறுக்கப்பட்டு
உறவுகள் முறியுமெனில் 
முறிந்த நிலையிலும் ஒட்ட
முயற்சிப்பது சிறுபிள்ளைத்தனம்,
எல்லாம் சிதறிய நிலையில் ..

சிதறிய  உறவுகளை
ஒன்றாய் குவிக்க 
நிச்சயம் வேண்டும் 
ஆண்டிற்கொரு முறை 
ஊர்த் திருவிழா ..
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக