12 ஏப்ரல் 2013

என் தோழிக்கு ....

சற்றே  எண்ணம் 
ஏதோ விலகுவது போல்..
பிடிக்காமல் பல தருணங்கள்
மறையா சில நிகழ்வுகள்  
இருப்பினும்
மனம் தேடலை நிறுத்தவில்லை 
அவளிடம் ..
ஏனெனில்  மனச்சுமையின் வலியை
உணர்ந்த அனுபவம் உண்டன்றோ ?
உரிமையுடன் முறைத்தேன்..
சண்டையிட்டேன்..
உணர்வோடு பல முறை  சிரித்தேன் ..
மகிழ்ந்தேன் மனத்தூரலில்..
மறக்க இயலா தருணங்களாய் 
அமைந்தது அவள் பேச்சு..
நன்கு  ரசித்தேன் 
அவள் புன்னகையை 
அன்று ..
நிறைவு பெற்றது  என் உள்ளம் 
அவள் மலர நான்  கொடியாய்  
இருந்ததை  எண்ணி ... 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக