22 அக்டோபர் 2013

இளையராணி

வருடத்திற்கு ஒருமுறை வந்து வந்து போகும் விருந்தாளியா இவன் !!!
         வசந்தமாய் மாறும் நாள்.. அச்சிறுமியின் முகம் ஜொலித்ததற்கு காரணம் அவள் பிறந்தநாள் என்றோ..   ஏழு வயது நிரம்பிய தன் மகளை தேவதையாக புத்தம் புது ஆடை கொண்டு  அலங்காரம் செய்த தந்தையிடம் இருந்த களிப்பு அளவிட இயலாதது.. எளியவனாக இருப்பினும் வெள்ளை சட்டை அணிந்து மிடுக்குத் தோற்றம் ஏற்று, ஒரு ஜமீன்தாராய் காட்சி அளித்தார் தன் மகளுக்கு அன்று. எதை கேட்டாலும் வாங்கித்  தர தயாராக இருக்கும் தந்தையால், அவள் தன் தாயையே மறந்தாள் என்பது தான் வியப்பு.  சுட்டித்தனம் குறையா,செல்ல மழலை அவள் அன்று..  அவள் தலையில் சூடிய மல்லிகை மலரைக்காட்டிலும் அவள் அதிகமாக மகிழ்ச்சி மணம் பரப்பினாள்..   தட்டு நிறைய மிட்டாய்கள்,வெட்டுவதற்காக வைக்கப்பட்ட சாக்லேட் கேக் யாவும் அனைவரின் பார்வையையும் ஈர்த்தது..
        பிறந்தநாள் பாடலோடு , கர ஓசையும் கை கோர்த்து அவளுக்கு வாழ்த்து மழை தூவியது. சாக்லேட் சுவையில் அவள் மூழ்கியவாரே , அனைவருக்கும் இனிப்பு வழங்கினாள். ஊதா பூவாய் அவளது ஆடை, பிறர் கண்ணை ஆர்பறித்தது.   சரிந்து விழாத துப்பட்டாவை, அள்ளி  எடுத்து தோளில் போட்ட தினுசு அவள் சிறுபிள்ளை என்பதையே அக்கணம் மறக்கசெய்தது. கோழிக்குஞ்சு போல, அவள்  தம்பி, அவள் பின்னே நடந்து வந்தது அவளை இளையராணியாகவே மாற்றியது அன்றைய தினம்..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக