பருவத்தே பயிர் செய்
என்பது காதலுக்கும்
விதிவிலக்கல்ல ..
காலம் கடந்த
காதல் வெளிப்பாடு
கடலில் கரைத்த
உப்பைப் போல்
உபயோகமின்றித் தான் போகிறது
கரைந்த போதிலும் .
அன்பினால் கரைக்க எண்ணுகிறான்
அவள் மனதை,
ஏற்கனவே அவள் மற்றவரின்
அன்பில் கரைந்திருந்த போதும் ..
அவனுக்கு காரணம் சொல்ல
பல இருந்தாலும்,
அவளிடம் இருந்த
ஒரே காரணம் நான்
என்னிடம் இல்லை
நீ கேட்டவுடன் அள்ளித் தர,
நான் இப்போது இருப்பதோ
என்னவனிடம் ..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக