தனியொரு மனிதனால் சமுதாயத்தின் மூலை முடுக்குகளில் நடைபெறும் சம்பவங்களைப் நேரில் பார்த்து சமூக நிலையை அறிந்து கொள்ள முடிவதில்லை என்று எண்ணுகிறேன். இருப்பினும் கண்முன்னே நடப்பவை, சமூகம் இப்படித் தான் இன்னமும் இருக்கிறது என்பதை சொல்லிக் கொண்டே இருக்கிறது.</div>
<p style="text-align: justify">தேர்தல் பிரச்சார களத்தில் வேட்பாளர்கள் ஓடிக் கொண்டிருந்த தருணம். நானும் பேருந்தில் வேகமாய் என் வீட்டை நோக்கிச் சென்று கொண்டிருந்தேன். அவ்வழியே , வாக்கு வங்கிக்காக மட்டுமே ராஜாவைப் போல ஊரை சுற்றி வரும் ஜாம்பவான்கள் வலம் வந்து கொண்டிருந்தனர். பரபரப்பான கட்சித் தோழர்கள் , களிப்பில் ஜாம்பவானுக்கு மாலை அணிவித்தனர் . பேருந்திற்காக காத்துக் கொண்டு இருப்பவர்கள் , வேடிக்கை பார்த்ததுமாய் , ஜாம்பவானை நோட்டமிட்டனர். பேருந்தில் உள்ள நாங்களும், அக்கூட்டதை பார்க்காமல் இல்லை. உடனே பேருந்து நடத்துனர், அருகில் உள்ள ஒரு பெண்ணிடம், "உனக்கு ஓட்டு இருக்காமா? நீ யாருக்கு போடப் போற? என்று கேலியாகக் கேட்டார். "எனக்கு ஓட்டு இல்லாமையா!! எங்க ஊர்ல ஓட்டு இருக்கு எங்க குடும்பத்துக்கு .. கண்டிப்பா போயிடுவோம்... என் பையன் கிட்ட யாரு பணம் தறாங்களோ, அவங்களுக்கு தான் என் ஓட்டு" என்றாள் அப்பெண்.
மக்கள் இன்றளவும் ஏமாந்து கொண்டு தான் இருக்கிறார்கள் என்று உள்ளூற எண்ணிக் கொண்டிருந்தேன். நடத்துனரோ , "யார் கொடுத்தா என்னம்மா, நீ போடுறது யாருக்குனு வந்து பார்க்கவா போறாங்க?" என்றார். "அதெப்படி அண்ணே . கை நீட்டி காசு வாங்கிட்டு எப்படி துரோகம் பண்றது.. யாருக்கு போடுறோம்னு பணம் வாங்கினமோ, அவங்களுக்குத் தான் ஓட்டு போடுவேன்.. இப்போ ஒரு பேச்சு, அப்புறம் ஒரு பேச்சுனு வார்த்தை மாறக் கூடாதுல.. என்ன சொல்றீங்க நீங்க.. என்னால எல்லாம் நம்பிக்கைத் துரோகம் பண்ணமுடியாதுங்க" என்று உரக்க சொல்லியபடியே பேருந்து நிலையத்தில் இறங்கினாள்.
படிக்காத கிராமத்து மணம் மட்டுமே தெரிந்தது அப்பெண்ணிடம். ஒரு நாள் கூலியாக 200 ரூபாய் மட்டுமே சம்பாதிக்கும் ஒரு சாமானிய பெண்ணிற்குத் தெரிந்த நம்பிக்கைத் துரோகம் எங்கே?? நம்பிக்கை துரோகத்தின் முழு உருவமாய் நிற்கும் இந்த ஜாம்பவான்கள் எங்கே??</p>